பக்கம் எண் :

1010திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


அடிகள்தம்மை யந்தமின்ஞான

சம்பந்தன்

படிகொள்பாடல் வல்லவர் தம்மேற்

பழிபோமே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப் பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞான சம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும்பழிகள் போகும்.

கு-ரை: ஞானசம்பந்தன் காழி அடிகளைப் பாடிய பாடல் வல்லவர் பழி நீங்கும் என்கின்றது. தென்றல் செங்கழுநீர்ப் பூவில் அளைந்து முன்றிலில் உலாவும் காழி என்க. வடி - மா. கொங்கு - தேன். கடி கொள் - மணத்தைக் கொள்ளுகின்ற. படிகொள் பாடல் - ஒப்பினைக்கொண்ட பாடல்.

நால்வர் நான்மணி மாலை

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலங்கல்வி
நல்லா தரவின்ப ஞானங்க - ளெல்லாந்
திருஞான சம்பந்தன் சேவடியே யென்னு
மொருஞான சம்பந்த முற்று.

- சிவப்பிரகாச சுவாமிகள்.

திருவருணைக் கலம்பகம்

ஆரும் விரும்பிய கல்விமேல் ஆசை உமக்குள தாயிடின்
பாருற வென்பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே
நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மைய றிந்தவ ணேகுவீர்
மேருநெ டுஞ்சிலை யத்தனார் வீறரு ணாபுரி வெற்பரே.

- சைவ எல்லப்ப நாவலர்.