பக்கம் எண் :

1012திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1113. கேணவல்லான் கேழல்வெண்கொம்பு

குறளாமை

பூணவல்லான் புரிசடைமேலொர்

புனல்கொன்றை

பேணவல்லான் பெண்மகள்தன்னை

யொருபாகம்

காணவல்லான் காதல்செய்கோயில்

கழுக்குன்றே. 2

1114. தேனகத்தார் வண்டதுவுண்ட

திகழ்கொன்றை

தானகத்தார் தண்மதிசூடித்

தலைமேலோர்

___________________________________________________

யுடையவன், நள்ளிருளில் நடமாடுதற்குரிய காட்டையுடையவன் அத்தகைய இறைவன் காதலிக்கும் இடம் கழுக்குன்று என்கின்றது. ஏடு - மலர். நள்ளிருள் - நடு இராத்திரி. ஏமம் - யாமம்.

2. பொ-ரை: திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணிய வல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூண வல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

கு-ரை: பன்றிக்கொம்பைக் கேணவல்லவனும், ஆமையோட்டைப் பூணவல்லவனும், கொன்றை மாலையணிபவனும், உமையை யொருபாகம் உடையவனும் ஆகிய இறைவன் கோயில் கழுக்குன்று என்கின்றது. கேண - சிதைக்க. கேழல் - பன்றி, குறள் ஆமை - சிறிய ஆமை. ஈண்டு அதன் ஓட்டினைக் குறிக்கின்றது.

3. பொ-ரை: தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.