வானகத்தார் வையகத்தார்கள்
தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே. 3
1115. துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய்
சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான்
பெண்ணினல்லாளை
யொருபாகம்
இணையல்செய்யா விலங்கெயின்மூன்று
மெரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே, 4
____________________________________________________
கு-ரை: கொன்றையையும், மதியையும்
அணிந்து விண்ணவரும் மண்ணவரும் துதிக்கநின்ற
இறைவன் இடம் இது என்கின்றது. தேன் அகத்து ஆர்
வண்டு - தேனைப் பூவினகத்தில் இருந்து உண்ணும் வண்டு,
கொன்றை தான் நக தார் தண்மதிசூடி -
கொன்றை மலர, அம்மாலையைத் தண் பிறையோடு சூடி.
கானகத்தான் - காட்டில் உறைபவன்.
4. பொ-ரை: வண்டுகள் யாழ்போல்
ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை
மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான
உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாக
பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத
புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை
விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும்
கோயில். கழுக்குன்றம் ஆகும்.
கு-ரை: கொன்றையணிந்து, உமையை
ஒருபாகத்துவைத்து, திரிபுரமெரித்த இறைவன் இடம்
இது என்கின்றது.
துணையல் - இரண்டிரண்டாகச் சேர்த்துக்
கட்டும் மாலை. பிணையல் - புணர்தல். இணையல் -
நட்புக்கொள்ளல். கணையல் செய்தான் -
அம்பெய்தான். நான்கு அடிகளிலும் அல் சாரியை.
|