1155. வாருறு கொங்கைநல்ல மடவாள்
திகழ்மார்பி னண்ணும்
காருறு கொன்றையொடுங்
கதநாகம் பூண்டருளிச்
சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான்
கழலேத்தல் நீதியே. 4
1156. பொன்றிக ழாமையொடு புரிநூல்
திகழ்மார்பி னல்ல
பன்றியின் கொம்பணிந்து
பணைத்தோளியோர் பாகமாகக்
__________________________________________________
லினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த
கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள்
சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய
நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே
நீதியாகும்.
கு-ரை: நீறுபூசிய திருமேனியோடு மலைமகள்
ஒருபாகமாக எழுந்தருளிய செங்குன்றூர் நீலகண்டன் திருவடியைத்
தொழுதலே நீதி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. நீலநன்மாமிடற்றான் -
நீலகண்டன். நன்மிடறு என்றது தேவர்க்கு நன்மை செய்தலின்.
4. பொ-ரை: கச்சணிந்த தனங்களை
உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண்
கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம்
பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப்
பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில்
எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய்
விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல்
நீதியாகும்.
கு-ரை: உமாதேவி விளங்குகின்ற, திருமார்பில்
கொன்றை மாலையையும் பாம்பு அணியையும் பூண்டு வீற்றிருக்கும்
செங்குன்றூர் நாதன் சேவடியைத் துதித்தல் நீதியாம்
என்கின்றது. வார் - கச்சு. கதம் - கோபம். சீர் -
புகழ்.
5. பொ-ரை: திருமகள் விளங்கும் திருமாலாகிய
ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண்
நல்ல பன்றியின்
|