குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான்
கழலேத்தல் மெய்ப்பொருளே. 5
1157. ஓங்கிய மூவிலைநற் சூல
மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு
மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ்
கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார்
வினையாய பற்றறுமே. 6
__________________________________________________
கொம்புகளையும் அணிந்து மூங்கில்
போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக
விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த
கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல்
போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை
ஏத்துதலே மெய்ப்பொருளாகும்.
கு-ரை: ஆமையோடும் பூணூலும்
விளங்கும் மார்பில், பன்றிக் கொம்பையும் அணிந்த
மாதொருபாதியனான செங்குன்றூர் நாதன் கழலெத்துதலே
மெய்ப்பொருள் என்கின்றது. பொன் திகழ் ஆமை ஓடு -
திருமகள் விளங்குகின்ற திருமாலாகிய ஆமையின் ஓடு.
பணை - மூங்கில்.
6. பொ-ரை: மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல
சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில்
தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து,
தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச்
செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும்
சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள்
வேர்ப்பற்றோடு நீங்கும்.
கு-ரை: சூலமேந்திய கையனும், கங்கையும் மதியமும்
சூடியவனும் ஆகிய செங்குன்றூர் நாதன் தாள் தொழுவாரது
வினைப்பற்று நீங்கும் என்கின்றது. ஓங்கிய
- சிறந்த. கோங்கு அணவும் - கோங்க
|