1158. நீடலர் கொன்றையொடு
நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாட லுடைதலையிற்
பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார்
வினையாய தேயுமே. 7
1159. மத்தநன் மாமலரும் மதியும்வளர்
கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல்
துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ்
கொடிமாடச்
செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 8
__________________________________________________
மரங்கள் கலந்த. பாங்கன தாள் - தோழமை
பூண்ட இறைவனுடைய தாள்கள்.
7. பொ-ரை: கொத்தாக நீண்டு மலர்கின்ற
கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த
சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய
தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள்
மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால்
சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய
பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின்
வினைகள் தேய்ந்தொழியும்.
கு-ரை: கொன்றை மாலையோடு சடைதாழ, உலர்ந்த
தலையிற் பலிகொள்ளும் செங்குன்றூர்நாதன் தாள் தொழுவாரது
வினைதேயும் என்கின்றது. நீடு அலர்
கொன்றை - மாலையாக நீண்டு மலர்கின்ற கொன்றை.
வாடல் - உலர்தல். கோடல் - செங்காந்தள். சேடன் -
பெருமையுடையவன்.
8. பொ-ரை: செஞ்சடைமீது நல்ல
ஊமத்த மலரையும் இளமதியையும் கொத்தாக அலரும்
கொன்றை மலருடன் ஒருசேர
|