1160. செம்பொனின் மேனியனாம்
பிரமன்றிரு
மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போ
லொளியாய வாதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ்
கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாடொழுவார்
வினையாய நாசமே. 9
1161. போதியர் பிண்டியரென்
றிவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர் வரிக்குயில்கள்
__________________________________________________
நெருங்கச் சூடிப் பூங்கொத்துக்கள்
அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில்
எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள்
இலராவர்.
கு-ரை: ஊமத்தம் பூவும், பிறையும்,
கொன்றையும் செஞ்சடை மேற்சூடிய தத்துவனைத் தொழுவார்
தடுமாற்றம் அறுப்பார் என்கின்றது. துன்று -
நெருங்கிய. தொத்து - கொத்து. துதைய - செறிய. தத்துவன்
- மெய்ப்பெருளானவன்.
9. பொ-ரை: சிவந்த பொன்போன்ற மேனியினன்
ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத் திரள்
போல ஒளி வடிவினனாய் ஓங்கிநின்ற மூல காரணனும்,
கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த
பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய
சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள்
நாசமாகும்.
கு-ரை: அயனும் மாலும் தேடச் செம்பவளத்திரள்
போல தீவடிவாய ஆதிப்பிரானது தாள் தொழுவார் வினைகள்
யாவும் நாசமாம் என்கின்றது. கொம்பு அணவும்
பொழில் - கொம்புகள் செறிந்த சோலை. நம்பன் -
சிவன்.
10. பொ-ரை: போதி மரத்தை வழிபடும்
புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர்
பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக்
|