கோதிய தண்பொழில்சூழ்
கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும்
வினையான வீடுமே. 10
1162. அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார்
புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூ ரேத்தும்
நலமலி பாடல்வல்லார்
வினையான நாசமே. 11
திருச்சிற்றம்பலம்.
__________________________________________________
காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு
அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை
பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில்
சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம்
விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள்
யாவும் அழியும்.
கு-ரை: புத்தர் சமணர் இவர்களுடைய
புறவுரை கேட்டு உழலுகின்றமக்களே! செங்குன்றூர் வேதியனைத்தொழ
உங்கள் வினையாயின அழியும் என்கின்றது.
போதியர் - புத்தர். பிண்டியர் - சைனர்.
கட்டுரை - கட்டிச் சொன்ன பொய்யுரை. கோதிய - மூக்காற்கோதி
யுண்ட. வேதியன் - வேதங்களை அருளிச்செய்தவன்.
வீடும் - அழியும்.
11. பொ-ரை: அலைகள் மிகுந்த குளிர்ந்த
நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும்
தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில்
வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய
சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப்
போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை
ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.
|