திருஞானசம்பந்தர்
புராணம்
அப்பாலைக்
குடபுலத்தில் ஆறணிந்தார் அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித் திருநணா வினை இறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப் பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன் றூர் வந்தணைந்து வைகினார்.
- சேக்கிழார்.
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
அலையார்ந்த
கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி எம்போல்வார்க் கிடர்கெடுத்தல்
காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.
செஞ்சடைவெண்
மதி அணிந்த சிவன் எந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.
தோடணிகா தினனென்றுந்
தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை
அந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காண அரன் உவனாமென் றுரைத்தனையே.
- நம்பியாண்டார் நம்பி. |