பக்கம் எண் :

1052திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1171. தாமரை மேலயனும் மரியுந்தம

தாள்வினையாற் றேடிக்

காமனை வீடுவித்தான்

கழல்காண்பில ராயகன்றார்

பூமரு வுங்குழலா ளுமைநங்கை

பொருந்தியிட்ட நல்ல

பாமரு வுங்குணத்தா

னுறைகோயில் பாதாளே. 9

1172. காலையி லுண்பவருஞ் சமண்கையருங்

கட்டுரை விட்டன்

றால விடநுகர்ந்தா னவன்

றன்னடி யேபரவி

__________________________________________________

9. பொ-ரை: மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.

கு-ரை: ஆள்வினையால் - முயற்சியால். செயலற்ற தன்மையில் சிந்திக்கவேண்டிய சிவத்தைச் செய்வினையாற் காணமுற்பட்ட அறிவீனத்தை விளக்கியவாறு. காமனை வீடுவித்தான் கழல் - காமனை எரித்த பெருமான் திருவடி. காமனும் தருக்கி வருவானாயினும் அவன் காண இருந்தமையும் அயனும் மாலும் காணாதிருந்தமைக்கும் ஏது ஒன்று உண்டு. இவர்கள் தாம் பெரியர் என்னுந் தருக்கால் முனைத்து வந்தவர்கள்; காமன் தேவகாரியம் என்றும், இந்திரன் சாபத்தால் இறப்பதைக் காட்டிலும்; சிவன் கோபத்தால் இறப்பதுமேல் என்றும் வந்தவன்; ஆதலால் இவனுக்குக் கட்புலனானார் என்பது சிந்தனைக்குரியது.

10. பொ-ரை: காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ் மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில்