விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை
வேதநான் கும்மவை
பண்டிசை பாடலினா
னுறைகோயில் பாதாளே. 7
1170. மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை
மறுகவன்று கையால்
தொல்லை மலையெடுத்த
வரக்கன்றலை தோணெரித்தான்
கொல்லை விடையுகந்தான்
குளிர்திங்கள்
சடைக் கணிந்தோன்
பல்லிசை பாடலினா
னுறைகோயில் பாதாளே. 8
_________________________________________________
உடையவனும், பகைவரான அசுரர்களின்
முப்புரங்களையும் எரித்தவனும், நான்கு வேதங்களையும்
உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசை மரபோடு பாடி
மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
கு-ரை: விண்டு - முறுக்கவிழ்ந்து. வன்னி
- வன்னியிலை. நகும் - மலரும். விண்டவர் - பகைவர்.
8. பொ-ரை: செறிந்த நுண்மையான
இடையினை உடைய உமையம்மை அஞ்ச அன்று கையால்
பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின்
தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத்
தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவனும்,
குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும்
பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய
சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
கு-ரை: இராவணன் தோள் நெரித்தது;
இறைவற்கு எழுந்த சீற்றம் காரணம் அன்று; உமாதேவி
நடுங்க, அந்நடுக்கந்தீரவே விரலூன்றி மலையை நிலைக்கச்செய்தார்;
அது இராவணற்கு இன்னலாயிற்று என்ற கருத்து ஓர்க.
கொல்லைவிடை - முல்லை நிலத்து இடபம்.
|