பக்கம் எண் :

1050திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1168. கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்

சடைதன்மே னன்று

விண்ணியன் மாமதியும்

முடன்வைத் தவன்விரும்பும்

பெண்ணமர் மேனியினான் பெருங்கா

டரங்காக வாடும்

பண்ணியல் பாடலினா

னுறைகோயில் பாதாளே. 6

1169. விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள

நாகம்வன் னிதிகழ்

வண்டலர் கொன்றைநகு

மதிபுல்கு வார்சடையான்

__________________________________________________

கு-ரை: பேய்கள் உடன்விளங்க, இடுகாட்டை நாடகமேடையாக எண்ணி, மான், மழு முதலியன தாங்கி ஆடும் பெருமான் உறைவிடம் பாதாளீச்சரம் என்கின்றது. உன்னிநின்று, திகழ்வித்து, சேர உடையான் உறைகோயில் பாதாள் எனக்கூட்டுக.

6. பொ-ரை: கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

கு-ரை: கண்ணமர்நெற்றி - கண்ணோடு விளங்குகின்ற நெற்றியை யுடையவன்.

நன்று விண் இயல் மாமதி - நன்றாக விண்ணில் இயங்குகின்ற பெரிய பிறைச்சந்திரன்.

7. பொ-ரை: தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை