பக்கம் எண் :

 114. திருமாற்பேறு1081


114. திருமாற்பேறு

பதிக வரலாறு:

55 - ஆம் பதிகம் பார்க்க.

பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 114

திருச்சிற்றம்பலம்

1228. குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1

1229. பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே. 2

__________________________________________________

1. பொ-ரை: குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும்; அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

கு-ரை: இப்பதிகம், மருந்தாய், மாறிலியாய், உமாபதியாய் கயிலாய பதியாய். காலகாலனாய், முனிவரும் தேவரும் மக்களும் ஒருசேர வணங்கத்தகும் எளிமையனாய் மாதுடையனாய், பிறை முதலிய சூடியவனாய், எந்தையாய் இருப்பவன் நகர் மாற்பேறு என்கின்றது. குருந்தவன் - குருந்தமரத்தடியிற் குருவானவன். இவ்வுரை மாணிக்கவாசகர் காலத்துக்கு ஞானசம்பந்தப் பெருமான் பின்னவராயிற்கொள்ளலாம். குருந்து - குருத்து எனலும் ஆம். குருகவன் - வயிர வகையில் ஒன்றானவன். மருந்து - அமுதம்.

2. பொ-ரை பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும்