கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே. 5
1233. பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. 6
* * * * * * * * 7
1234. தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய வண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே. 8
__________________________________________________
பிறையணிந்த சடைமுடியனும், உமை
நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை
பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாளனும்,
காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது
வளநகர், மாற்பேறாகும்.
கு-ரை: துறையவன் - பல நெறிகளாய்
இருப்பவன். தொழிலவன் - ஐந்து தொழிலையுடையவன்.
கறை - விடம்.
6. பொ-ரை: பெண்களிற்
பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக
வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை
நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள்
முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால்
வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர்,
மாற்பேறாகும்.
கு-ரை: உமையையொருபாகம் வைத்தும்
மன்மதனைக் கண்ணாற் காய்ந்தவன் என்பதில்
நயம்ஓர்க. விண்ணவர் முதலானோர் ஒப்ப
வணங்கத்தகும் எளிமையில் இருப்பவன் என இறைவனுடைய
ஒப்பநோக்கும் பேரருள் உரைக்கப்பட்டது.
7. * * * * * * * * *
8. பொ-ரை: குற்றமற்ற கயிலை
மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில்
கால்விரலால் அடர்த்துப் பின்
|