1235. செய்யதண் டாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயனன் சேவடி யதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே. 9
1236. குளித்துணா வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுறார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே. 10
_________________________________________________
அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத
கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய
அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள்
தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
கு-ரை: மாதி - மாதினையுடையவன்.
9. பொ-ரை: சிவந்த தண் தாமரை
மலர் போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து
அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும்
பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை
விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும்
சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.
கு-ரை: ஐயன்நன்சேவடி - தலைவனுடைய
நல்ல சேவடியை மையல் - விருப்பம்.
10. பொ-ரை: குளித்துப்பின் உண்ணாத
இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய
புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக்
காணப் பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த
வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது
சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
கு-ரை: ‘கூழாயினுங் குளித்துக் குடி‘
என்பது உலக வாய்மொழியாகவும் குளித்து உண்ணாத
அமணர்கள் என அவர்கள் இயல்பு கூறியது.
குண்டு ஆக்கர் - பரு உடலராகிய புத்தர்.
|