பக்கம் எண் :

 116. பொது1089


1245. தடவரை யரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலா னான்மறைக்கும்
இடமவ னிராமன தீச்சரமே. 8

1246. தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி யயனணி முடியுங்காணான்
பனமணி வரவரி பாதங்காணான்
இனமணி யிராமன தீச்சரமே. 9

__________________________________________________

கு-ரை: மாதொருபங்கன், நீறாடி, ஆறுசூடி, அழகன் நகர் இது என்கின்றது. மாறு இலா மாது - அபின்னையாகிய பராசக்தி. நீறு அது ஆடலோன் - நீறாடியவன்.

8. பொ-ரை: பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும், விரிந்த சடைமுடியை உடையவனும், நடனம் புரிபவனும், நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

கு-ரை: இராவணனை நெரித்தவன், அரவாட்டிய சடையன், நடனம் ஆடுதலையுடையவன் நகர் இது என்கின்றது. நான்மறைக்கும் இடம் அவன் - வேதங்கள் நான்கிற்கும் இடம் ஆயவன்.

9. பொ-ரை: அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும், அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன், திருவடியைக் காணாத, படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும்.

கு-ரை: உமைபாகனை அயன்முடிகாணான், அரிஅடிகாணான். அத்தகைய இறைவன் நகர் இது என்கின்றது. அனம் அணிஅயன் - அன்னமாகத் தன்னைப்புனைந்து கொண்டபிரமன். பன மணி வரவு அரி - படங்களில் மணிகளையுடைய ஆதிசேடன் மேல் வருதலையுடைய மால். பண என்பது எதுகை நோக்கிப் பன என ஆயிற்று.