பக்கம் எண் :

1092திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1250. காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங்

கனிமனத்தால்

ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென்

றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்

நாமடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு

நீலகண்டம். 2

__________________________________________________

சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

கு-ரை: நாம் முன்முன் பிறவிகளில் ஈட்டிய தீவினைகட்கு ஏற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம் என்று சொல்லும் அடியார்களைப் பார்த்து நீங்கள் உய்வைத் தேடாதிருப்பது ஊனமல்லவா? கைத்தொண்டு செய்து கழலைப் போற்றுவோம்; நாம் செய்தவினை நம்மைத் தீண்டா; திருநீலகண்டம் என்கின்றது.

அவ்வினைக்கு - முன்னைய வினைக்கு. இவ்வினை - இப்போது சுரநோயால் வருந்தும் இவ்வினை. உய்வினை - தீரும் உபாயத்தை. கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி.

2. பொ-ரை: நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு ‘கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே‘ என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

கு-ரை: திரிபுரம் எரித்த பெருமானே! நந்தவனமே வைத்தும், குளந்தோண்டியும், பூவெடுத்துக்கட்டி அணிவித்தும் போற்றுவோம்; ஆதலால் தீவினை எம்மைவந்து தீண்டப்பெறா திருநீல கண்டம் என்கின்றது. கா - சோலை. தொட்டும் - தோண்டியும். ஏ வினையால் - அம்பின் தொழிலால்.