பக்கம் எண் :

 116. பொது1093


1251. முலைத்தட மூழ்கிய போகங் களுமற்

றெவையுமெல்லாம்

விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட

விரிசடையீர்

இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு

மிவையுடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறாதிரு

நீலகண்டம். 3

1252. விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும்

வேதியரும்

புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும்

புண்ணியரே

_________________________________________________

3. பொ-ரை: நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை ‘எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே‘ முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்று வோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

கு-ரை: போகங்கள் எம்மைப் பற்றாவண்ணம் தடுத்தாண்ட பெருந்தகையீர்! சூலம் மழு இவற்றையுடையீர்! எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. விலைத்து அலையாவண்ணம்; அடியேனை விலகச்செய்து அலையாவண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். சிலைத்து - ஒலித்து. விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம்.

4. பொ-ரை: நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் ‘புண்ணிய வடிவமானவர்‘ என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய