கண்ணிமை யாதன மூன்றுடை யீருங்
கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம். 4
1253. மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண்
டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந்
தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி
யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம். 5
__________________________________________________
தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது
திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
கு-ரை: வேதியரும்
வித்தியாதரர்களும் புண்ணியர் என்று தொழும்
புண்ணியரே! உம் கழல் அடைந்தோம் திண்ணிய
தீவினை தீண்டப்பெறா என்கின்றது.
திண்ணியதீவினை தீண்டப்பெறா என்றது இதுவரை
.நுகர்ந்த அளவிலேயே அமைவதாக, திருவருள்
நோக்கத்தால் அவை மென்மையாயின ஆதலின்
இங்ஙனம் கூறினார்
5. பொ-ரை: நாம் சிவனுக்கு
அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை
நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட தி்ண்மையான
தோள்களை உடையவரே! எம்மைப் பெருவலிமை கொண்டு
ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக்
கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?
இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத்
துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக
அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம்
முற்பிறவியில் செய்த தீவினைகள் பெருவலிமை
கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா.
இதுதிருநீலகண்டத்தின் மேல் ஆணை.
கு-ரை: ஒப்பற்ற மலைபோல் திரண்ட
தோளுடையீர்! எம்மையாட்கொண்டும் எம்குறையைக்
கேளாதொழிவது பெருமையோ? எல்லாத் துணையையும்
விட்டு உமது திருவடி யடைந்தோம்
|