1254. மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை
வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை
யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும்
பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம். 6
__________________________________________________
ஆதலால் எம்மைத் தீவினை
தீண்டப்பெறா . திரு நீலகண்டம் ஆணை என்கின்றது.
மற்று -வேறு. இணை - ஒப்பு.கிற்று - வலிபடைத்து.
சொல்துணைவாழ்க்கை - சொல்லப்படுகிற துணைகள்
பலவற்றோடும் கூடிய வாழ்க்கை. செற்று - வருத்தி.
எமது வினைகளை வெருட்டும் வலியுடையீர் என்று
குறிக்க இணையில்லா மலை திரண்டன்னதோளுடையீர்
என்று குறிப்பித்தது. எமக்கும் தேவரீர்க்கும்
உள்ள தொடர்பு ஆட்கொள்ளப்பட்டதால் உண்டான
ஆண்டானும் அடிமையுமான தொடர்பு அங்ஙனமிருந்தும்
எமது குறையை நீரேயறிந்து நீக்க வேண்டியிருக்க,
சொல்லியும் கேளாது ஒழிவதும் தன்மையோ என்றார்.
துணையென்று சொல்லப்படுகின்ற வாழ்க்கைகளைத்
துறந்து உம் திருவடியடைந்தோம் என்றது அகப்பற்றும்
புறப்பற்றும் விட்டு உம்மைப்பற்றினோம் என்றது.
தீவினை செற்றுத் தீண்டப்பெறா என்றது தீவினைகள்
தீண்டுபவற்றைத் தடுத்தலாகாது ஆயினும் அவை
வலியிழந்தனவாகத் தீண்டா என்று விளக்கியவாறு.
கிற்று -கற்றல் பொருந்திய.
6. பொ-ரை: நாம் சிவனுக்கு
அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை
நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை
மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை
வற்புறுத்திப் பிறப்பற்ற அச்சிவபெருமானுடைய
அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை
நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக்கொண்டு
பூசித்து ‘உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர்
நாங்கள்’ எனக் கூறி வழிபட்டவரின் சிறப்பற்ற
தீய பழவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது
திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
கு-ரை: எம்மோடு ஒன்றி வராமல்
மறுக்கும் தண்மைவாய்ந்த மனத்தையும் மாற்றி,
உயிரை வற்புறுத்தித் தேவரீர் திருவடிக்குப் பிழை
ஏற்படாதவண்ணம் மலர்கொண்டேத்தும்
அடியேங்களைச் சிறப்பு
|