பக்கம் எண் :

 117. திருப்பிரமபுரம்1097


1256. நாற்ற மலர்மிசை நான்முக னாரணன்

வாதுசெய்து

தோற்ற முடைய வடியு முடியுந்

தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும்

நாமடியோம்

சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு

நீலகண்டம். 9

1257. சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி

யுடையொழிந்தும்

பாக்கிய மின்றி யிருதலைப் போகமும்

பற்றும்விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி

போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு

நீலகண்டம். 10

_________________________________________________

9. பொ-ரை: நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத் தன்மையை உடையவரே! என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திரு நீலகண்டத்தின்மேல் ஆனை.

கு-ரை: மலர்மேலயனும் திருமாலும் தங்களுக்குள் வாது செய்து, அடியும் முடியும் அறியப்படாத தன்மையை யுடையவரே! காணப்பெறினும் பெறுவீர், உம்மைத் தொழுது வணங்குவோம்; சீற்ற மாகிய வினை எம்மைத்தீண்டப்பெறா; திருநீலகண்டம் என்கின்றது. நாற்றம் - மணம். தோற்றமுடைய - கட்புலனாகிய. சீற்றம் - கோபம்.

10. பொ-ரை: நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து