பக்கம் எண் :

1098திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1258. பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன்

கழலடைவான்

இறந்த பிறவியுண் டாகி லிமையவர்

கோனடிக்கண்

திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ்

பத்தும்வல்லார்

நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங்

கூடுவரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இத் திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

கு-ரை: சாக்கியராயும் சமணராகியும் இருமையின்பமும் ஒழிந்தார்கள்; நாங்கள் நும் திருவடி போற்றுகின்றோம் ; எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. இருதலைப் போகம் - இம்மை மறுமை யின்பம் தீக்குழித் தீவினை - திக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை.

11. பொ-ரை: மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவ பிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்றேு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

கு-ரை: எமது இறைவன் கழலடையப் பிறந்த இப்பிறவியில் சிவபெருமான் திருவடியைப்பேணி, மீட்டும் பிறவியுளதாயின், இம்மொழி பத்தும் வல்லார்கள் வானவர்கோனொடுங் கூடுவர் என்கின்றது. அடைவான் பேணி, வல்லார், பிறவியுண்டாகில் கோனொடுங் கூடுவர் என முடிக்க.