பக்கம் எண் :

1110திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1274. கொங்கணி நறுங்கொன்றைத்

தொங்கலன் குளிர்சடையான்

எங்கணோ யகலநின்றா

னெனவரு ளீசனிடம்

ஐங்கணை வரிசிலையா

னநங்கனை யழகழித்த

பைங்கண்வெள் ளேறுடையான்

பருப்பதம் பரவுதுமே. 4

__________________________________________________

ஆகிய இரண்டிலும் பற்றுக் கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெருமானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.

கு-ரை: பிறவித் துன்பம் நீங்கப் பிறந்த நீ, செய்த நல்வினை யால் எய்தப்போகும் இன்பப் பிறவியை எண்ணி இரண்டுபட்ட மனம் எய்தாதே. திருமலையைப் பரவுவோம் வா என்கின்றது.

துனி - வருத்தம். கோடிசெல்வம் பெற முயன்றார் பிடி செல்வம் பெற்றுமகிழார்கள். அதுபோல நீ பேரின்பம் பெறப் பிறந்து புண்ணிய வசத்தால் வரும் தேவலோக இன்பம் முதலியவற்றைச் சிந்தியாதே உறுதியாக இரு என்பதாம். முசு - குரங்கு.

4. பொ-ரை: தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன். எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்பு வில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதி திருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.

கு-ரை: எங்கள் பிறவிநோய் போக்க அருள் செய்யும் ஈசன் இடம் திருமலை என்கின்றது. கொங்கு - தேன். தொங்கலன் - மாலையையுடையவன். அநங்கன் - மன்மதன்.