1275. துறைபல சுனைமூழ்கித்
தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால்
வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந்
தேனின மொலியோவாப்
பறைபடு விளங்கருவிப்
பருப்பதம் பரவுதுமே. 5
1276. சீர்கெழு சிறப்போவாச்
செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே
யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக்
கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவாப்
பருப்பதம் பரவுதுமே. 6
__________________________________________________
5.
பொ-ரை: கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு
வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும்,
வண்டுகளின் ஒலியும்நீங்காததாய்ப் பறை போல
ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும்,
தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில்
மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத
கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு
வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய
திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
கு-ரை: வானவர்கள் சுனைநீராடித்
தொழும் பருப்பதம் பரவுதும் என்கின்றது. சிறை -
சிறகுகள். தேனினம் - வண்டுக்கூட்டம். பறை படும் -
முழவுபோல ஒலிக்கும்.
6. பொ-ரை: அழகிய மடநெஞ்சே!
பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம்
மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற
விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என
இரண்டுபட என்னாமல் உறுதியாக ஒன்றை நினைந்து
நெறியின் பயனாய் விளங்கும் கார்காலத்தே மலரும்
மணம் மிக்க கொன்றை மலர் மாலை சூடிய
|