பக்கம் எண் :

1112திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1277. புடைபுல்கு படர்கமலம்

புகையோடு விரைகமழத்

தொடைபுல்கு நறுமாலை

திருமுடி மிசையேற

விடைபுல்கு கொடியேந்தி

வெந்தவெண் ணீறணிவான்

படைபுல்கு மழுவாளன்

பருப்பதம் பரவுதுமே. 7

1278. நினைப்பெனு நெடுங்கிணற்றை

நின்றுநின் றயராதே

மனத்தினை வலித்தொழிந்தே

னவலம்வந் தடையாமைக்

__________________________________________________

வனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

கு-ரை: நெஞ்சே! சிறப்பகலாத செய்தவம் வேண்டில் இரண்டு பட எண்ணாதே; புகழ் நீங்காப்பொருப்பைப் பரவுதும் என்கின்றது. ஏர் - எழுச்சி.

7. பொ-ரை: ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர்வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.

கு-ரை: விடைக்கொடியை ஏந்தி நீறணியும் நிமலன் பருப்பதம் பரவுதும் என்கின்றது. புடை - பக்கம். புகை - யாகப்புகை, விரை - மணம். தொடை புல்கு - தொடுத்தலைப் பொருந்திய. விடை - இட பம்.

8. பொ-ரை: நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையா வண்ணம் காத்துக்