பக்கம் எண் :

 118. திருப்பருப்பதம்1113


கனைத்தெழு திரள்கங்கை

கமழ்சடைக் கரந்தான்றன்

பனைத்திரள் பாயருவிப்

பருப்பதம் பரவுதுமே. 8

1279. மருவிய வல்வினைநோ

யவலம்வந் தடையாமல்

திருவுரு வமர்ந்தானுந்

திசைமுக முடையானும்

இருவரு மறியாமை

யெழுந்த தோரெரிநடுவே

பருவரை யுறநிமிர்ந்தான்

பருப்பதம் பரவுதுமே. 9

__________________________________________________

கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

கு-ரை: நினைப்பாகிய கிணற்றைப் பார்த்து நின்று நின்று மயங்காமல், மனத்தை வலிய அடிப்படுத்தினேன்; ஆதலால்அவலம் அடையா வண்ணம் பருப்பதம் பரவுதும் என்கின்றது. அயராது - மயங்காமல். வலித்து - இழுத்து. நினைப்பை ஆழமான கிணறாகவும், மனத்தைக் கயிறாகவும் உருவகித்தார்; இது மனத்தினை வலித்து என்பதனால் உணரப்பெருகின்றது.

9. பொ-ரை: பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான்முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

கு-ரை: அயனும் மாலும் அறியாவண்ணம் எரிநடுவே மலையாய் எழுந்தானது பருப்பதம் பரவுதும் என்கின்றது. வல்வினை