பக்கம் எண் :

1114திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1280. சடங்கொண்ட சாத்திரத்தார்

சாக்கியர் சமண்குண்டர்

மடங்கொண்ட விரும்பியராய்

மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்

குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்

போதுமின் குஞ்சரத்தின்

படங்கொண்ட போர்வையினான்

பருப்பதம் பரவுதுமே. 10

1281. வெண்செநெல் விளைகழனி

விழவொலி கழுமலத்தான்

பண்செலப் பலபாட

லிசைமுரல் பருப்பதத்தை

__________________________________________________

நோய் - பரிபாகமுற்ற வினையால்வரும் துன்பம், அவலம் - அதனால் விளைந்த செயலறிவு. திரு உரு அமர்ந்தான் - திருமகளைத் தன் மார்பில் வைத்த திருமால், பருவரை உற - பெரியமலையைப் போல.

10. பொ-ரை: அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவ பிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.

கு-ரை: சமணர் புத்தர்கட்குப்பின் பேய்த்தேர்முன் குடங்கொண்டு தண்ணீர்க்குப் போவார்போல போவார்போக, யானை யுரிபோர்த்த இறைவன் பருப்பதம் பரவுதும் என்கின்றது. சடம் - அறியாமை. மடம் - அறியாமை. பேயத்தேர் - கானல்நீர். குஞ்சரத்தின் படம் - யானைத்தோலாகிய ஆடை.

11. பொ-ரை: வெண்ணெல், செந்நெல் ஆகிய இருவகை நெற்பயிர்களும் விளைவுதரும் வயல்களையுடையதும் விழாக்களின் ஆரவாரம் மிகுந்து தோன்றுவதுமாகிய கழுமலத்தில் அவதரித்தவனாய்ப் பண்ணோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் இசைபாடி இறைவனைப் பரவிவரும் ஞானசம்பந்தன், திருப்பருப்பதத்தை நல்ல