பக்கம் எண் :

 119. திருக்கள்ளில்1115


நன்சொலி னாற்பரவு

ஞானசம் பந்தனல்ல

ஒண்சொலி னிவைமாலை

யுருவெணத் தவமாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

சொற்கள் அமைந்த பாடலால் பாடிய ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப் பரவ,அதுவே தவமாகிப் பயன்தரும்.

கு-ரை: சீபருப்பதத்தைத் திருஞானசம்பந்தர் சொன்ன இம்மாலையை உருவெண்ணத்தவமாம் என்கின்றது. வெண் செந்நெல்: உம்மைத்தொகை. எண்ண என்பது எண எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.

திருஞானசம்பந்தர் புராணம்

கூற்றுதைத்தோர் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்

குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி

ஏற்றின்மிசை வருவார் இந் திரன்றன் நீல

பருப்பதமும் பாடிமற் றிறைவர் தானம்

போற்றியசொன் மலர்மாலை பிறவும்பாடிப்

புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்

நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ

நெடிதுமகிழ்ந்தப்பதியில் நிலவு கின்றார்.

- சேக்கிழார்.

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம்
தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளினைகள்
என்தலையின் மேலிருக்க என்று.

- நம்பியான்டார் நம்பி.