1299. வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர்மெல்விரல் பாகமதாகிதன்
அந்தமில் வளநக ரந்தணை யாறே. 7
1300. விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத்தாலிறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநக ரந்தணை யாறே. 8
__________________________________________________
முதல்வனும், அழகு விளங்கும் என்
பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால்
தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர்
அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
கு-ரை: வலியுடையனை, முனிவரும்
தேவரும் வணங்கும் இன்ப வடிவனை, என்
பொன்போன்றவனை, அந்தணர் வணங்கும் அன்பனை
உரிமையாக உடைய தலம் ஐயாறு என்கின்றது. முன்பு -
வலிமை. இணையில இறைவனை - ஒப்பற்ற முதல்வனை.
எழில் - அழகு. அன்பன - அன்பனுடையதான
7. பொ-ரை: பெருவலி படைத்த
அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே
வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய
மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய
உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய
சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய
ஐயாறாகும்.
கு-ரை: திரிபுரங்கள் தீயிடை வேவ
எய்தவன், பந்தணை விரலியைப் பாகங்கொண்டவன்
வளநகர் ஐயாறு என்கின்றது. அந்தம் இல் -
அழிவில்லாத.
8. பொ-ரை: செருக்கோடு வந்த வலிய
இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில்
தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி,
அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள்,
தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய
சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய
ஐயாறாகும்.
கு-ரை: இராவணனை அடித்தலத்தால்
அடர்த்தவன் நகர்
|