பக்கம் எண் :

 120. திருவையாறு1123


1297. வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநக ரந்தணை யாறே. 5

1298. முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும்
இன்பனை யிணையில விறைவனை யெழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநக ரந்தணை யாறே. 6

__________________________________________________

வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு வேதஙங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும்தண்மையும் உடைய திருவையாறாகும்.

கு-ரை: திரிபுரம் எரித்தவன், பிறையும் நீரும் பொருந்திய சடையினன், வேதம் அங்கம் இவற்றை யாய்ந்தவன் நகர் ஐயாறு என்கின்றது. வாய்ந்த - வரங்களின் வன்மைவாய்ந்த. ஆய்ந்தவன் - ஆராயப் பெற்றவன். வேதங்களை ஆயவேண்டிய இன்றியமையாமை இறைவற்கின்றாதலின் வேதங்களால் ஆராயப் பெற்றவன் என்பதே பொருந்துவதாம்.

5. பொ-ரை: வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும். தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

கு-ரை: பிறையணிந்த சடையில் பாம்பையும் கொன்றையையும் சூடியவன், விளங்கும் மார்பினையுடையவன், உமையொருபாதியன் வளநகர் ஐயாறு என்கின்றது. வானமர் மதி என்றது மதியென்ற பொதுமைநோக்கி. ஒர் பாகம் ஆனவன் என்பதற்கு இடப்பாகம் கொண்டவன் என்றுரைப்பினும் அமையும்.

6. பொ-ரை: வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற