பக்கம் எண் :

1122திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1295. வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவ னெழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது விமையவர் குறைகொள
அரிந்தவன் வளநக ரந்தணை யாறே. 3

1296. வாய்ந்தவல் லவுணர்தம் வளநக ரெரியிடை
மாய்ந்தற வெய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை யாறங்கம்
ஆய்ந்தவன் வளநக ரந்தணை யாறே. 4

__________________________________________________

புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர்அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

கு-ரை: திரிபுரம் எரித்தவன், யானையையுரித்தப் போர்த்தியவன், புலித்தோல் பாம்பு இவற்றை அரையிற் கட்டியவன் நகர் ஐயாறு என்கின்றது. கீர்த்தி மிக்கவன் நகர் - திரிபுரம். திரிபுராதிகளுக்கு உண்டான கீர்த்தி அவர்கள் அழிவிற்குக் காரணமாயிற்று எனக் குறித்தவாறு, அடப் பார்த்தவன் - அழிய விழித்தவன், திரிபுரத்தை விழித் தெரித்ததாக ஒரு வரலாறு தேவாரத்துப் பல இடங்களிலும் வருதல் காண்க. அதள் - தோல். ஆர்த்தவன் - கட்டியவன்.

3. பொ-ரை: இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும், தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

கு-ரை: வில்லேந்தி அவுணர் முப்புரங்களும் எரிய எய்தவனும், பிரமனுடைய சிரத்தைத் தேவர்கள் வேண்ட அரிந்தவனும் ஆகிய இறைவன நகர்இது என்கின்றது. வரிந்த - கணுக்கள் தோறும் கட்டப்பெற்ற. பிரமன் சிரங்கொய்தது தம்மைப்போல ஐந்தலை படைத் திருந்தமையால் அன்று; தேவர்கள் வேண்டிக் கொள்ள அவர்கள் மீது வைத்த கருணையினாலேயே என்பது விளக்கியவாறு.

4. பொ-ரை: வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும்,