120. திருவையாறு
திருவிராகம்
பண் : வியாழக் குறிஞ்சி
பதிக எண்: 120
திருச்சிற்றம்பலம்
1293. பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநக ரந்தணை யாறே. 1
1294. கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை
ஆர்த்தவன் வளநக ரந்தணை யாறே. 2
__________________________________________________
1. பொ-ரை: தண்னை வணங்கும்
அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை
அடியோடுஅவர்கட்கு அருள் வழங்கத்
துணிந்திருப்பவனும், மார்பின்கன் மான்தோலோடு
விளங்கும் முப்புரி நூல் அணிந்தவனும், பாம்போடு
பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய
சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.
கு-ரை: அடியார்களுடைய அருவினைகளை
யறுத்து அருள் செய்யத்துணிந்தவன்; தோல்
சேர்ந்தநூல் செறிந்த மார்பினையுடையவன்; அரவோடு
ஆமை ஒட்டைப் பிணித்தவன் வளநகர் ஐயாறு
என்கின்றது. பணிந்தவர் - தார்வெனும் தன்மையோடு
அடிபணிந்த அடியார்கள். அருவினை - திருவருளன்றி
வேறொன்றாலும் நீக்குதற்கரியவினை. பிணித்தவன்
எனற்பாலது எதுகை நோக்கி பிணிந்தவன் என
மெலிந்தது.
2. பொ-ரை: புகழ் மிக்கவனும்,
பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப்
பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி
விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை
விரிந்த சடைமுடி மீது வைத்துள்ளவனும், யானையின்
தோலை உரித்துப் போர்த்தவனும்,
|