1303. நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக்
கலைமலி தமிழிலை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர்தாமே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: அலைகள் வீசும் ஆறு குளம்
முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று
இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன்
போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம்
நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று
வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப்
பெறுவர்.
கு-ரை: ஐயாற்றைப் பற்றித்
திருஞானசம்பந்தர் சொல்லிய கலைமலிதமிழிவை வல்லார்
புகழ்மிகுந்த நன்மையர் ஆவர் எனப் பயன் கூறுகின்றது.
திருஞானசம்பந்தர் புராணம்
மாடநிரை மணிவீதித் திருவையாற் றினில்வாழு
மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ னகர்வந்து
நண்ணினார் என்
றாடலொடு பாடல் அறா அணிமூதூர் அடையஅலங்
காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா
னத்து நீங்கி.
- சேக்கிழார்.
|
|