அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
அட்டதிக்
கினும் உலகில் இடுசராசரம் மெலிந்து
ஆருயிர்
பதைப்ப வாடி
அங்கமே சோர்ந்திடும் வறுமை வந்திடும்
காலம்
அவ்வினை வளர்கன்னலின்
கட்டுதீம்
பால்கொழுங் கனிசெந்நெலன்னங்
களிப்பினொடு
தொண்டர் உண்ணக்
கண்காட்சி பெறுபேட்டை கட்டிய
நவ நிதியமும்
கணக்கில்பல சரக்கும் நிறையச்
செட்டியப்பார்என்று பேர்கொண்டு விற்பதிற்
சேர்வட்ட வாசி பார்த்துத்
தினமும் இப் படிஉனது
கணவன் விற்பனை செயச்
செய்து திகழ் சம்பந்தர்
சொற்
சட்டமிகும் அப்பர்சொற்பாடல் கொண்டருள்
செல்வி
சப்பாணி கொட்டியருளே
தங்கப்படிக்காசு
பங்கிட்டு வைத்தகிளி
சப்பாணி கொட்டியருளே. |