பக்கம் எண் :

 125. திருச்சிவபுரம்1151


1346. மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களு மதியிலர்
துன்மதி யமணர்க டொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே. 10

1347. நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள், அடியவர் பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.

கு-ரை: இந்நகரை நினைவார் அடியார் கூட்டத்தோடு அவனியில் நிகழ்பவர் என்கின்றது. குழுமிட - கூட. கருதருவகை - தியானிக்க முடியாதவண்ணம். உலகுகள் நிறைதரு நெடியவன் என்றது திருமாலும் நெடியவனாயினும் அவன் நின்ற இடமும் காலமும் நீங்க ஏனைய இடத்தும் எக்காலத்தும் நிறைந்தான் அல்லன்; சிவன் என்றும் எங்கும் பேரொளியாய் நிறைந்தான் என்பது விளக்க வந்தது.

10. பொ-ரை: மருதத்தினது வலிய மலரால் துவர்ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்.

கு-ரை: புத்தர்கள் மதியிலிகள்: சமணர்களோ துன்மதிகள்: இந்த இருவகையாராலும் தொடர்பரிய புகழுடைய இறைவன் மிழலையை நினையவல்லவர் மன்மதன் போல அழகு பெறுவர் என்கின்றது. மருது அமர் வன்மலர் துவர் உடையவர் - மருத மலரால் ஊட்டிய காவியாடையை யுடையவர்கள்.

11. பொ-ரை: முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை ஒப்பற்ற புகலிப் பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால் விளைந்த இப்பதிகப் பாடல்கள்