வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 7
1344. ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி
செலுமவர்
அரக்கனன் மணிமுடி யொருபது மிருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 8
1345. அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர்
கடிமல ரயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுக ணிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே. 9
_________________________________________________
வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான
நகராய், மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேத
விதிகளையும், அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய
திருவீழிமிழலையை நினைய வல்லவர்தம் கைகளால்
பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப்
பெறுவர்.
கு-ரை: மிழலை நினைவார் வள்ளலாவார்
என்கிறது. கரம் பயில் கொடையினர் - கை பலகாலும்
பயின்ற வள்ளன்மையையுடையவராவர். கடிமலர் - மணமுள்ளமலர்.
பயில்வு அற எறி சிவன் எனப் பிரிக்க. வரம் - மேன்மை.
8. பொ-ரை: இராவணனுடைய மணிமுடி தரித்த
பத்துத் தலைகளும், இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர்
போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய
சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட
உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.
கு-ரை: மிழலையை நினைவார் ஒன்றுபட்ட
உணர்வோடு ஞானமார்க்கத்தை நாடுவர் என்கின்றது.
ஒருக்கிய - ஒன்றுபட்ட. ஒளிநெறி - சிவஞானமார்க்கம்.
கரக்கனம் - கைகளாகிய கூட்டம்.
9. பொ-ரை: மணம் மிக்க தாமரை மலர்மேல்
விளங்கும் பிரமனும், திருமாலும் நினைதற்கு அரிய
வகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய
பெரியோனாகிய சிவபிரானது
|