1341. புகழ்மகள் துணையினர் புரிகுழ லுமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 5
1342. அன்றின ரரியென வருபவ ரரிதினில்
ஒன்றிய திரிபுர மொருநொடி யினிலெரி
சென்று கொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே. 6
1343. கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
__________________________________________________
5. பொ-ரை: சுருண்ட கூந்தலை உடைய
உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேத நெறிகளை
ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து சிதைத்தருளியவனாகிய
சிவபிரானது புகழ் பொருந்திய திரு வீழிமிழலையை நினைய
வல்லவர் புகழ்மகளைப் பொருந்துவர்.
கு-ரை: உமாதேவியை இகழ்ந்த பிரமனது
சிரத்தைக் கொய்த சிவபெருமான் எழுந்தருளிய இத்தலத்தை
நினையவல்லவர் கீர்த்திமாதைப் பொருந்துவர் என்கின்றது.
இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்முகம் -
இகழ்ந்த பிரமனது அழகிய வேதநெறி வளரும் முகத்தை;
என்றது வேதஞ்சொல்லும் வாயையுடைய தலையை என்பதாம்.
6. பொ-ரை: தவம் செய்து அரிதாகப் பெற்ற
ஒன்று பட்ட முப்புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி
ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து
புகழ் பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய
வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறுபோன்ற வன்மை
உடையவராவர்.
கு-ரை: திரிபுரம் எரித்த
சிவபெருமானுடைய இந்நகரை நினைய வல்லவர் பகைவர்களாகிய
யானைகட்குச் சிங்கம் போல்பவர் என்கின்றது. அன்றினர்
- பகைவர். அரி - சிங்கம். சிறுமுறுவல் - புன்னகை.
7. பொ-ரை: மணங்கமழும் தாமரை மலர்மேல்
உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில்
பொருந்தா
|