1350. வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விட நுகர்பவ னெழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரு மடியவ ருயர்கதி யினரே. 3
1351. துணிவுடை யவர்சுடு பொடியின ருடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய
மணிமிட றனதடி யிணைதொழு மவரே. 4
_________________________________________________
திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை
உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர்கெடும்.
உயர்கதி பெறுவது உறுதி.
கு-ரை: ஒளிபொருந்திய சடையினன்;
இடபத்தையுடையவன்; திரிபுரமெரித்த வீரன் உறைபதி
சிவபுரம்; அதனையடைய நம் துன்பம் தொலையும்; உயர்கதி
பெறுவது உறுதி என்கின்றது. திடல் - மேடு.
3. பொ-ரை: மந்தரமலை மத்தாகச்
சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும்
பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி, நுரையுடன்
வெளிப்பட்ட விடம், கடலில் பொருந்த, ஆலகாலம்
என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக்
கரையில் மோதும் நீர்நிறைந்த அரிசிலாற்றங்கரையில்
விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர்கதிகளைப்
பெறுவர்.
கு-ரை: மந்தர மலை சுற்ற, வாசுகியின்
உடல் அழலெழ வந்த நுரையோடு கூடிய விடத்தை நுகர்ந்தவனது
சிவபுரத்தைப் புகழ்பவர் உயர்கதியினர் என்கின்றது.
வரை - மந்தரமலை. வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எனவும், எழில் திகழ்
திரைபொரு புனல் அரிசிலது அடை சிவபுரம் எனவும்
பிரித்துப் பொருள் கொள்க.
4. பொ-ரை: அடக்கமுடைய மக்கள்
வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும்
மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோர்
துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர்.
உடலை வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப்
பெறுவர்.
கு-ரை: அடங்கிய மனத்து அடியவர்கள் பயில்கின்ற
சிவபுரஞ்
|