பக்கம் எண் :

 125. திருச்சிவபுரம்1155


1352. மறையவன் மதியவன் மலையவ னிலையவன்
நிறையவ னுமையவண் மகிழ்நட நவில்பவன்
இறையவ னிமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென வுடையவ னெமையுடை யவனே. 5

1353. முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவு செய்
ததிர்கழ லொலிசெய வருநட நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த விணையிலி யணைபதி
சதிர்பெறு முளமுடை யவர்சிவ புரமே 6

_________________________________________________

சேர்ந்த நீலகண்டப் பெருமானது திருவடியைத் தொழுபவர்கள் துணிவுடையர்; நீற்றினர்; பிணியிலர்; பிறவியும் அறப்பெறுவர் என்கின்றது. உடல் அடு பிணி - உடலில் வருத்துகின்ற நோய். விசிறுவர் - வீசுவர். தணிவு - பணிவு. மணி - நீலம்.

5. பொ-ரை: தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுச் சிவபுரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.

கு-ரை: சிவபுரம் உறைபவன் எம்மையும் ஆளாக உடையவன் என்கின்றது. நிலை - அழியாமை. உறைவு - உறையும் இடம்.

6. பொ-ரை: முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும் சிவபுரமாகும்.

கு-ரை: முதிர் சடையிலே மதியையும் கங்கையையும் பதியச் செய்து நடம் செய்பவன்; திரிபுரம் எரித்த சிவன்; அவன் உறைபதி சிவபுரம் என்கின்றது. எதிர்பவர் - பகைவர். இணையிலி - ஒப்பற்றவன். சதிர் - சாமர்த்தியம்.