பக்கம் எண் :

1170திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கு-ரை: கழுமல நகரிறையைத் திருஞானசம்பந்தன் சொன்ன மொழிகளை இசையோடு குறையின்றி மனங்கொளப் பயிற்றுவோர் மார்பைத் திருமகள் சேர்வாள் எனப் பயன்கூறியது. கஞ்சத்தேன் உண்டிட்டு - தாமரையிலுள்ள தேனைக் குடித்து. சண்பகக் கானேதேனே போராரும் - சண்பகக் காட்டிலுள்ள வண்டோடு பொரும். தஞ்சை சார் - அடைக்கலமாகச் சாருகின்ற. தேன் நேர்ஆர் தமிழ் விரகன மொழிகள் - தேனுக்கு ஒப்பான தமிழ் விரகருடைய சொற்கள். எஞ்ச தேய்வு இன்றி - குறைவின்றி. ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா - இருபத்தொரு பண் முறையால். வானோர் சீர்மதி நுதல் மடவரல் - தேவர்களது சிறப்போடுகூடிய மதிபோன்ற நெற்றியினையுடைய திருமகள்.

திருமுறை கண்ட புராணம்

சேடர்மலி காழிநகர் வேந்தர்தாமும்

தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கின்

பீடுடைய உமைமுலைப்பால் அருளால் உண்டு

பிஞ்ஞகனைச் சினவிடைமேற் பெருகக் கண்டு

தோடுடைய செவியன் முதல் கல்லூர்என்னுந்

தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்

பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்

பதினாறா யிரம்உளதாப் பகரும் அன்றே.

அருமறையைச் சிச்சிலிபண்டு அருந்தத்தேடும்

அதுபோல்அன் றிதுஎன்றும் உளதாம் உண்மைப்

பரபதமும் தற்பரமும் பரனே அன்றிப்

பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்

எரியினிடை வேவாதுஆற் றெதிரே ஓடும்

என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ்சாற்றும்

கரியைவளை விக்கும்கல் மிதக்கப் பண்ணும்

கராம்மதலை கரையில்உறக் காற்றும் காணே.

- உமாபதி சிவாசாரியார்.