1393. கற்றவர்கள் பணிந்தேத்துங்
கழுமலத்து
ளீசன்றன் கழன்மேனல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றா னயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந்
திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணா
னடிசேர முயல்கின்றாரே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
கு-ரை: குணமில்லாமல் புத்தர்களும்,
பொய்த் தவத்தை மெய்த்தவமாக்காட்டி யொழுகும்
சமணர்களும், உணராதவகை நின்றான் கோயில்,
திருமணவொலியும், விழவொலியும் தம்முட்கலக்க,
பூவுலகில் தேவர்கள் கூட்டம் சேருங்கால் உளதாகும்
வேதவொலி அடங்க, அவை மேற்பட ஒலிக்கும் கழுமலம்
என்கின்றது. வதுவை - தாலிகட்டுங் கல்யாணம்.
11. பொ-ரை: கற்றவர்களாலே
பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும்
இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு
நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன்
விரும்பிப் போற்றிப் பாடிய, ஓதுவார்களுக்குத்
துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப்
பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள்
கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி
கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.
கு-ரை: கழுமலத்தீசன் திருவடிமேல்,
கற்றவர் நற்றுணையாகிய ஞானசம்பந்தன் சொன்ன
திருப்பாடல் பத்தும் வல்லார் திருமகள் கணவராகி
உலகமுழுதாண்டு சிவபெருமான் திருவடி சேர
முயல்கின்றார் என்கின்றது. சொல்துணை -
ஓதுவார்க்குத் துணையான சொல்.
|