1406. வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள்
கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல்
திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே. 2
1407. தக்கனது பெருவேள்விச்
சந்திரனிந்
திரனெச்ச னருக்கனங்கி
மிக்கவிதா தாவினொடும்
விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
_________________________________________________
இறைவன். பளிங்கே போல் -
வெண்பளிங்கு போல், "சுத்த ஸ்படிக
சங்காசம்" என்ற இறைவனுக்கு நிறம் கூறுகிறது
சிவாகமம். வெதிர் - மூங்கில்.
2. பொ-ரை: தேன்மணம் மிகும்
கூந்தலையுடைய உமையம்மையோடு வேட்டுவ
உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய
கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி
அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை
விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான்
உறையும் கோயில், மழையால் செழித்த மணமுடைய
சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும்
உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய
வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும்
புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும்.
கு-ரை: விசயனது பொறுமையளந்து
பாசுபதம் அருளிய பரமன் கோயில், தென்றற்காற்று
பொழிலில் கனியுதிர்த்து, மலர்சிந்தி,
முன்றிலில் உலாவும் முதுகுன்றம் என்கின்றது. வேரி -
தேன். மலர் உதிர்த்து என்றது தென்றலின்
மணமுடைமையையும், கயம் முயங்கி என்பது
குளிர்மையையும் உணர்த்தின. கயம் - குளம். மூரி -
வலிமை.
3. பொ-ரை: தக்கன் செய்த
பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன்,
சூரியன், அனலோன், பிரமன், முதலியவர்களை
வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய
சிவபெருமான்
|