கொக்கினிய கொழும்வருக்கை
கதலிகமு
குயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 3
1408. வெம்மைமிகு புரவாணர்
மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோ னிந்திரன்மால்
சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநா
ணரியெரிகால் வாளியாக
மும்மதிலு நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிட முதுகுன்றமே. 4
_________________________________________________
உறையும் கோயில், இனிய மாங்கனிகள்,
வளமான பலாக்கனிகள், வாழைக் கனிகள் ஆகிய
முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட
வயல்களும் குலைகளையுடைய கமுகு, தென்னை ஆகிய
மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த
திருமுதுகுன்றமாகும்.
கு-ரை: சிவத்துரோகியான தக்கன்
யாகத்திற்குச் சென்ற குற்றத்திற்காகச்
சந்திரன் முதலியோரை முறைப்படி தண்டித்த இறைவன்
கோயில், முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
வயல்சூழ்ந்த முதுகுன்றம் என்கின்றது. எச்சன் -
யாகபுருஷன். அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி.
விதாதா - பிரமன். கொக்கு - மாமரம். வருக்கை - பலா.
கதலி - வாழை.
4. பொ-ரை: கொடுமை மிகுந்து
முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய
அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும்,
பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக்
காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும்,
மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை
வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும்,
திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும்
அம்பாகவும் கொண்டு அவுணர்களின்
மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி
செய்த தலைவனாகிய சிவபிரானது இடம்,
திருமுதுகுன்றமாகும்.
கு-ரை: முப்புராதிகள் தீங்கு செய்ய,
தேவர்கள் வேண்டு
|