பக்கம் எண் :

 131. திருமுதுகுன்றம்1209


1409. இழைமேவு கலையல்கு லேந்திழையா

ளொருபாலா யொருபாலெள்கா

துழைமேவு முரியுடுத்த வொருவனிருப்

பிடமென்ப ரும்பரோங்கு

கழைமேவு மடமந்தி மழைகண்டு

மகவினொடும் புகவொண்கல்லின்

முழைமேவு மால்யானை யிரைதேரும்

வளர்சாரன் முதுகுன்றமே. 5

1410. நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த

நாதனிடம் நன்முத்தாறு

வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு

கரையருகு மறியமோதித்

_________________________________________________

கோளின் வண்ணம், அவர்களைத் தேர் முதலிய சாதனங்களாகக் கொண்டு எரித்த முதல்வனிடம் முதுகுன்றம் என்கின்றது. விறல் - வலிமை. மாசுணம் - வாசுகியென்னும் பாம்பு. அரி, எரி, கால் வாளியாக - திருமாலும், அங்கியும், காற்றுமாகிய முத்தேவர்களும் அம்பாக.

5. பொ-ரை: மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒரு பாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித் தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரிய யானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: ஒருபால் உமை விளங்க. ஒருபால் மான்தோலையுடுத்திய ஒருவன் இருப்பிடம் மந்தி மழையைக் கண்டு குட்டியோடு குகையையடைய, யானை இரை தேடும் முதுகுன்றம் என்கின்றது. இழை - அணி. எள்காது - இகழாது. உழை மேவும் உரி - மானினது தோல். கழை - மூங்கில். மந்தி - பெண் குரங்கு. முழை - குகை.

6. பொ-ரை: சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலைமாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம்,