பக்கம் எண் :

1210திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு

நீர்குவளை சாயப்பாய்ந்து

முகையார்செந் தாமரைகண் முகமலர

வயல்தழுவு முதுகுன்றமே. 6

1411. அறங்கிளரு நால்வேத மாலின்கீ

ழிருந்தருளி யமரர்வேண்ட

நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தி

னொன்றறுத்த நிமலர்கோயில்

திறங்கொண்மணித் தரளங்கள் வரத்திரண்டங்

கெழிற்குறவர் சிறுமிமார்கள்

முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி

முத்துலைப்பெய் முதுகுன்றமே. 7

_________________________________________________

நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: தலைமாலையணிந்த தலைவனிடம், மணிமுத்தாறு மலைப்பண்டங்களைக் கொண்டு இருகரையிலும் எடுத்து எறிந்து கரையை யுடைத்துக் கொண்டு, நெல்லும் கழுநீரும் குவளையும் சாயப்பாய்ந்து, தாமரை மலர வயலைத் தழுவும் முதுகுன்றம் என்கின்றது. நகை - பல், வரைப்பண்டம் - மலைபடுதிரவியம்.

7. பொ-ரை: அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவபிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப் பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரி மணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: ஆலின் கீழிருந்து சனகாதியர்க்கு வேதப்பொருளை