பக்கம் எண் :

 132. திருவீழிமிழலை1213


1415. முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யு

முதுகுன்றத் திறையைமூவாப்

பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய

கழுமலமே பதியாக்கொண்டு

தழங்கெரிமூன் றோம்புதொழிற் றமிழ்ஞான

சம்பந்தன் சமைத்தபாடல்

வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்

நீடுலக மாள்வர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்.

_________________________________________________

11. பொ-ரை: ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப் பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம்பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.

கு-ரை: முதுகுன்றநாதனைப் பன்னிருநாமம் படைத்த பழம் பதியாகிய காழியை யிடமாகக்கொண்ட, தழலோம்பு தொழிலுடைய தமிழ் ஞானசம்பந்தன் அமைத்த பாடல்களை, இசை கூடும் வகை பாடுபவர்கள் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர் என்கின்றது. தழங்கு - ஒலிக்கின்ற. எரிமூன்று - ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்பன.

திருஞானசம்பந்தர் புராணம்

வான நாயகர் திருமுது குன்றினை

வழிபட வலங்கொள்வார்

தூந றுந்தமிழ்ச் சொல்லிருக் குக்குறட்

டுணைமலர் மொழிந் தேத்தி

ஞான போனகர் நம்பர்தங் கோயிலை

நண்ணிஅங் குள்புக்குத்

தேன லம்புதண் கொன்றையார் சேவடி

திளைத்தஅன் பொடு தாழ்ந்தார்.

- சேக்கிழார்.