பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை யடிகளே. 8
1456. நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றன்மிக்க வடிகளே. 9
1457. திருவிலிச்சில தேரமணாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயி லெய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே. 10
_________________________________________________
விரல் ஒன்றினால் நெரித்தவர்.
தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத்
தகர்த்தவர்.
கு-ரை: தசக்கிரிவன் - இராவணன்.
9. பொ-ரை: திருப்பராய்த்துறையில்
ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம்
பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன்,
திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப் பெறாத
தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின்
வினைகளைப் போக்குபவர்.
கு-ரை: நாற்றம் - மணம்.
பாற்றினார் - சிதற அடித்தார்.
10. பொ-ரை: புண்ணியமில்லாத
சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய,
கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக்
கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால்
முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத்
திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும்
இறைவனை வாழ்த்துவீர்களாக.
கு-ரை: திரு - சிவஞானம். தேரர் -
புத்த சமயத்தினர். ஆதர் - கீழ்மக்கள். பரு வில் -
(மலையாகிய) பெருத்த வில். எயில் - திரிபுரம்.
வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.
|