பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த வடிகளே. 5
1453. மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை
அறையநின்ற வடிகளே. 6
1454. விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற வடிகளே. 7
1455. தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
__________________________________________________
பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள்
நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப்
பெற்றவர்.
கு-ரை: அவர் வேதம் பரவினார் -
அவர் வேதங்களாற் பரவப் பெற்றவர்.
6. பொ-ரை: பறை, சங்கு முதலியன
முழங்கும் திருவிழாக்கள் நிகழும்
திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து
போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர்.
மான் கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை
கொண்ட கண்டத்தையுடையவர்.
கு-ரை: மறி - குட்டி. கறை - விடம்.
7. பொ-ரை: திருப்பராய்த்துறையிற்
பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை
ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப்
பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர்.
வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.
கு-ரை: அடைய - எங்குமாய்; பொருந்த
என்றும் ஆம்.
8. பொ-ரை: திருப்பராய்த்துறையில்
எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை
உடைய இராவணனைத் தம் கால்
|