பக்கம் எண் :

 பாட்டு முதற்குறிப்பகராதி1251


1469. பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ

பொரூஉம் புன றிரூஉவமர் புகல்லியென் றுலகில்

தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ

துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபுரம் பதியைப்

பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை

யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார்

இன்னொடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும்

முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே. 11

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.

கு-ரை: புத்தரும் சமணரும் கூறும் பொய்யினின்றும் நீங்கி, அழிவில்லாத் தன்மைபெற்ற புலவர்கள் பத்தர்கள் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், சுடலைப்பொடி யணிபவரும், உமையைக் கூடி, பிரிதலைச் செய்யாதவரும் ஆகிய இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. கடதுவர் மொய்த்து - கடுவிதையால் உண்டாக்கப் பெற்ற துவர் நெருங்கி. உறி புல்கிய கையர் - உறி தூக்கிய கையை யுடைய சமணர். உகந்தவர் - மகிழ்ந்தவர். தத்து அருவி - தாவிக் குதிக்கின்ற அருவி. மால்கடல் - பெரிய கடல். கருங்கடலுமாம்.

11. பொ-ரை: பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.