ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம்
மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. 9
1468. புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய
கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர்
புலவோர்
பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடுந் தடம்பொழிற் றருமபு ரம்பதியே. 10
_________________________________________________
ஆகியவை தங்கும் சடையினர். கூரிய
சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி
கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு
மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர்.
ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட
திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில்
உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத்
தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர்.
கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த
மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள
இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச்
செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.
கு-ரை: மென்முலை மாதை ஓர்
பாகங்கொண்டவர்; மதியும் அரவும் வைகிய சடையர்;
மழுவும் சூலமும் அவர் படை; அவர் வில் மலை; அயனாலும்
மாலாலும் அறியமுடியாதவர்; கொன்றை மாலையை
விரும்பியவர்; இவர் தங்குமிடம் தருமபுரம்
என்கின்றது. தனி மலை - ஒப்பற்ற மேருமலை. ஆர் மலி
ஆழி - ஆரக்கால் நிறைந்த சக்கரம். ஆழிகொள்
செல்வன் - திருமால். அல்லி - அகவிதழ். தார்மலி
கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. அலங்கல்
- மாலை.
10. பொ-ரை: புத்தர்களாகிய
தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த்
திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று
நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள்
பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப் பயனாக
உகந்தவரும், அன்புக்கு
|